ஒருவாரத்தில் மறுபடியும் ஒரு புயலா? தாங்குமா தமிழகம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்குதான் கரையை கடந்தது என்பதும், இந்த புயல் கரையை கடந்த சுவடு கூட இன்னும் போகவில்லை என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அதற்குள் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் தமிழகத்தில் மழை பெய்யும் என்ற நிலையில் நிவர் புயலால் சென்னை உள்பட வட மாவட்டங்களில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் கனமழை காரணமாக நிரம்பிவிட்டது. இந்த நிலையில் வங்கக்கடலில் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக உருவெடுக்க வாய்ப்பு இருப்பதாகவும், நவம்பர் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
தெற்கு வங்கக்கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் தமிழகத்தை நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. நிவர் புயலால் சென்னை உள்பட தமிழகத்தின் வடக்கு பகுதியில் நல்ல பெய்தாலும் தென்மாவட்டங்களிலும் சுத்தமாக மழையில்லை. எனவே அடுத்து வரும் புயல், தென்மாவட்ட விவசாயிகளுக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments