தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா: 10ஆக உயர்ந்ததால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்த நிலையில் தற்போது விருதுநகரைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. இம்முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு ஆயுதப்படை காவலர் என்பது குறிப்பிடத்தக்கது
விருதுநகரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் சமீபத்தில் கோவைக்கு பணி நிமித்தம் காரணமாக சென்றார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பதாக தெரிகிறது. அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டவுடன் அவர் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தனிமைப்படுத்தி உள்ள மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதால் அதன் பின்னராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Community transmission in TN. Armed Police constable in Virudhunagar tests positive for #covid . Tamil Nadu tally now at 10. https://t.co/1YURaelkap
— Sumanth Raman (@sumanthraman) March 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com