தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா: 10ஆக உயர்ந்ததால் பரபரப்பு

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்த நிலையில் தற்போது விருதுநகரைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. இம்முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு ஆயுதப்படை காவலர் என்பது குறிப்பிடத்தக்கது

விருதுநகரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் சமீபத்தில் கோவைக்கு பணி நிமித்தம் காரணமாக சென்றார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பதாக தெரிகிறது. அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டவுடன் அவர் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தனிமைப்படுத்தி உள்ள மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதால் அதன் பின்னராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

கொரோனா அச்சம் எதிரொலி: ஜன்னல் வழியாக குதித்து ஓடிய விமானி

விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக சந்தேகம் எழுந்ததால் விமானத்தை ஓட்டி வந்த விமானி, விமானத்தின் முன் பக்க ஜன்னல் வழியாக

தமிழகத்தில் 144 அமல்!!! என்ன செய்யலாம்??? என்ன செய்யக்கூடாது???

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு நாளை மாலை 6 மணிமுதல் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறது.

நாளை முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு

ஆர்கே செல்வமணி கேட்ட அடுத்த நிமிடமே அள்ளி கொடுத்த சூர்யா குடும்பம்

பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் சற்றுமுன் வெளியிட்ட அறிக்கையில் வேலைநிறுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு

கொரோனா எதிரொலி; இத்தாலிக்கு உதவிக்கரம் நீட்டிய கியூபா!!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி இந்நூற்றாண்டில் பெரிய எண்ணிக்கையிலான இழப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.