மேலும் ஒரு அட்மின் டுவீட்: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கொண்டாட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமிபத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்து பின்னர் அந்த பதிவு தனது அட்மின் தனது அனுமதியில்லாமல் பதிவு செய்ததாக கூறினார். இதனால் கண்ணுக்கு தெரியாத அட்மின் வாங்கிய திட்டுக்கள் ஏராளம். இந்த நிலையில் மேலும் ஒரு அரசியல்வாதி சர்ச்சைக்குரிய கருத்தை கூறிவிட்டு அது அட்மினின் கருத்து என்று திடீர் பல்டி அடித்துள்ளார்.
முன்னாள் கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லி மற்றும் அவரது மகனின் டுவிட்டர் பக்கத்தில் விரைவில் நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவு போடப்பட்டிருந்தது. இந்த கருத்து வீரப்ப மொய்லி மற்றும் அவரது மகன் ஹர்ஷா மொய்லி ஆகிய இருவரின் டுவிட்டர் பக்கங்களில் ஒரே நேரத்தில் பதிவாகியிருந்தது
இந்த டுவிட்டால் காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் திடீரென அந்த இரண்டு பதிவுகளும் நீக்கப்பட்டன. இதுகுறித்து வீரப்பமொய்லி கூறியபோது, ' என் பெயரில் உள்ள டுவிட்டர் பக்கம் அதிகாரப்பூர்வமற்றது. கட்சி விவகாரங்களை இப்படி பொதுவெளியில் நான் ஒருபோதும் எழுவதில்லை என்று கூறினார். அவரது மகன் ஹர்ஷா இதுகுறித்து கூறியபோது எங்கள் அனுமதி இல்லாமல் அந்த பக்கத்தை நிர்வகிப்பவர் போட்டியிருக்கலாம், அல்லது எங்கள் டுவிட்டர் பக்கம் ஹேக்கிங் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த இரு விளக்கங்களும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.
இனிமேலாவது பிரபலங்கள் அட்மின் இல்லாமல் டுவீட் பதிவு செய்ய வேண்டும் அல்லது டுவிட்டர் பக்கமே வரக்கூடாது என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments