மேலும் ஒரு அட்மின் டுவீட்: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கொண்டாட்டம்

  • IndiaGlitz, [Friday,March 16 2018]

சமிபத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்து பின்னர் அந்த பதிவு தனது அட்மின் தனது அனுமதியில்லாமல் பதிவு செய்ததாக கூறினார். இதனால் கண்ணுக்கு தெரியாத அட்மின்  வாங்கிய திட்டுக்கள் ஏராளம். இந்த நிலையில் மேலும் ஒரு அரசியல்வாதி சர்ச்சைக்குரிய கருத்தை கூறிவிட்டு அது அட்மினின் கருத்து என்று திடீர் பல்டி அடித்துள்ளார்.

முன்னாள் கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லி மற்றும் அவரது மகனின் டுவிட்டர் பக்கத்தில் விரைவில் நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவு போடப்பட்டிருந்தது. இந்த கருத்து வீரப்ப மொய்லி மற்றும் அவரது மகன் ஹர்ஷா மொய்லி ஆகிய இருவரின் டுவிட்டர் பக்கங்களில் ஒரே நேரத்தில் பதிவாகியிருந்தது

இந்த டுவிட்டால் காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் திடீரென அந்த இரண்டு பதிவுகளும் நீக்கப்பட்டன. இதுகுறித்து வீரப்பமொய்லி கூறியபோது, ' என் பெயரில் உள்ள டுவிட்டர் பக்கம் அதிகாரப்பூர்வமற்றது. கட்சி விவகாரங்களை இப்படி பொதுவெளியில் நான் ஒருபோதும் எழுவதில்லை என்று கூறினார். அவரது மகன் ஹர்ஷா இதுகுறித்து கூறியபோது எங்கள் அனுமதி இல்லாமல் அந்த பக்கத்தை நிர்வகிப்பவர் போட்டியிருக்கலாம், அல்லது எங்கள் டுவிட்டர் பக்கம் ஹேக்கிங் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த இரு விளக்கங்களும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

இனிமேலாவது பிரபலங்கள் அட்மின் இல்லாமல் டுவீட் பதிவு செய்ய வேண்டும் அல்லது டுவிட்டர் பக்கமே வரக்கூடாது என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

More News

இர்பான்கானுக்கு வந்த கொடிய நோய் இதுதான்

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் சமீபத்தில் தான் ஒரு நோயினால் தாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நோய் என்னவென்று ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் என்றும் கூறியிருந்தார்.

தமிழ்ராக்கர்ஸ் அட்மின்கள் கைதை அடுத்து அடுத்த அதிரடி

திரைப்படம் வெளியாகும் அன்றே இணையதளத்தில் திருட்டுத்தனமாக ஒளிபரப்பி வந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் ஐந்து பேர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்.

உஷா உயிரிழப்புக்கு காரணமான ஆய்வாளர் ஜாமீன் மனுவின் தீர்ப்பு

திருச்சி அருகே மூன்று மாத கர்ப்பிணியின் உயிரிழப்புக்கு காரணமான காவல்துறை அதிகாரி காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்

'நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க' பெண் நிருபரின் கேள்விக்கு அமைச்சரின் பதில்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பெண் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல், 'நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க' என்று அமைச்சர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

பன்னீர்செல்வத்தின் பட்ஜெட்டை கலாய்த்த கமல்ஹாசன்

அதிமுகவினர் தவிர மற்ற அனைவரும் பட்ஜெட்டை விமர்சனம் செய்து முடித்துவிட்ட நிலையில் கமல்ஹாசனும் தன் பங்குக்கு தனது டுவிட்டரில் பட்ஜெட்டை கலாய்த்துள்ளார்.