கொரோனாவால் சென்னையை சேர்ந்த மேலும் ஒருவர் பலி:

தமிழகத்தில் தினமும் 50க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருவதும் அவர்களில் ஒன்று அல்லது இரண்டு பேர் கொரோனா வைரசால் பலியாகி வருவதுமான செய்திகளை தினந்தோறும் பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று தமிழகத்தில் 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்றும் ஒரே ஒருவர் மட்டும் உயிரிழந்தார் என்றும் தமிழக தலைமைச் செயலாளர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கொரோனா வைரசால் தமிழகத்தில் மேலும் ஒரு உயிர் பலியாகி உள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி பலியாகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தினமும் ஓரிருவர் வைரஸுக்கு பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனாவால் இயற்கைக்கு ஏற்பட்ட மாற்றம்: நாசாவின் ஆச்சரிய புகைப்படம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி, லட்சக்கணக்கானோர் பலியாகி உள்ள நிலையில் இந்த வைரஸ் மனித இனத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.

ஆன்லைனில் பாடம் நடத்திய போது திடீரென வந்த ஆபாச வீடியோ: ஹேக்கர்கள் கைவரிசையா?

இந்தியா மட்டுமன்றி உலகின் பல நாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வீட்டிலிருந்து பணி செய்வது மற்றும் ஆன்லைன் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்துவது

பீனிக்ஸ் மால் சென்ற மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று!

சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

வீடு புகுந்து சாத்திருவேன்: ஜாக்குலினை மிரட்டிய பக்கத்து வீட்டு நபர்

விஜய் டிவியில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருபவர் ஜாக்லின். இவர் தனது கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்துள்ளார்

உலகப் பொருளாதாரம் 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பேரடியைச் சந்திக்கும்!!! சர்வதேச நிதி ஆணையம்!!!

கொரோனா வைரஸ் காரணமாக உலகப்பொருளாதாரம் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிய இழப்பை சந்தித்து வருகிறது