கொரோனாவுக்கு சென்னை மருத்துவர் பலி: முக ஸ்டாலின் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு இதுவரை 15 பேர் பலியாகியுள்ள நிலையில் இன்று சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் பலியாகியுள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நரம்பியல் நிபுணர் மருத்துவர் ஒருவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். இவர் சென்னை தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஆந்திராவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னையில் கொரோனாவுக்கு பலியான நிலையில் தற்போது சென்னையில் மேலும் ஒரு மருத்துவர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு மருத்துவர் பலியானது குறித்து எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு மருத்துவர் பலியாகி இருப்பது வேதனையளிக்கிறது. மக்கள் நலன் காக்கப் பணியாற்றும் காவல்துறையினர், ஊடகத்தினருக்கும் கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிமுக அரசு அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டிய அவசர நிலையையே இது உணர்த்துகிறது!
தமிழகத்தில் #COVID19-க்கு மேலும் ஒரு மருத்துவர் பலியாகி இருப்பது வேதனையளிக்கிறது. மக்கள் நலன் காக்கப் பணியாற்றும் காவல்துறையினர், ஊடகத்தினருக்கும் #CoronaVirus தொற்றி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) April 20, 2020
அதிமுக அரசு அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டிய அவசர நிலையையே இது உணர்த்துகிறது! pic.twitter.com/hRTZE31GkN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout