ரஜினியின் இன்னொரு கேமியோ படம்.. மகள் தான் இயக்குனர்.. ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,February 08 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த ’லால் சலாம்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் இன்னொரு திரைப்படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘அக்னி சாட்சி’ உள்பட ஒருசில திரைப்படங்களில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ’லால் சலாம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ’வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சசிகுமாரின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.. 5 மொழிகளில் விரைவில் ரிலீஸ்..!

சசிகுமார் நடித்த அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில்

வில்லனாக நடிக்க மாட்டேன் என்று சொன்ன விஜய் சேதுபதி.. ஆனால் இந்த படத்தை அவரால் மறுக்க முடியலையா?

சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி கூறிய நிலையில் பிரபல நடிகரின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததை அடுத்து அந்த

வயிற்றில் இருப்பது லட்சுமியா? கணேஷாவா? நடிகையின் கர்ப்பத்தை அறிவித்த கணவர்..!

தமிழ் உள்பட பல மொழி திரைப்படங்களில் நடித்த நடிகை 5 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது வயிற்றில் வளர்வது லட்சுமியா? கணேஷாவா? என்று அவரது கணவர் தனது மனைவியின் கர்ப்பத்தை உறுதி செய்துள்ளார்

வசூலில் சாதனை செய்த 'தி கேரளா ஸ்டோரி'.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

இந்திய திரை உலகில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த 'தி கேரளா ஸ்டோரி'  என்ற திரைப்படம் ஜி5 ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

விவாகரத்தாகி 3 வருடங்கள் கழித்து துணையை கண்டுபிடித்துவிட்டேன்: சன் டிவி சீரியல் நடிகை அறிவிப்பு..!

சன் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்த நடிகை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவரை விவாகரத்து செய்த நிலையில் தற்போது புதிய துணையை கண்டுபிடித்துவிட்டேன்