இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி என தகவல்
- IndiaGlitz, [Saturday,April 27 2019]
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்கிய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலால் இலங்கை மக்கள் நிலைகுலைந்து போயுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பின்னரும் ஒருசில பகுதிகளில் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதால் இலங்கையில் தாக்குதல் தொடரும் என்றும் அஞ்சப்பட்டது.
இந்த நிலையில் இலங்கையில் நேற்றிரவு மீண்டும் குண்டுவெடிப்பு நடந்ததாகவும் இதில் 15 பேர் பலியாகியிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இலங்கையில் இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருந்த நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் இலங்கை வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 3 சக்கர வண்டியில் வெடிபொருளுடன் இருந்த 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் இருவருக்கும் பாதுகாப்பு படையினர்களுக்கும் இடையே நடந்த மோதலில் தீவிரவாதிகள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.