'சர்தார் 2' படத்தில் இணைந்த இன்னொரு நடிகை.. முதல் பாகத்தில் நடித்தவரா?

  • IndiaGlitz, [Thursday,August 15 2024]

கார்த்தி நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’சர்தார் 2’ திரைப்படத்தில் ஏற்கனவே மாளவிகா மோகனன் மற்றும் ஆஷிகா ரகுநாத் நடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு நடிகை இணைந்துள்ளதாக சற்று முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி நடித்த ’சர்தார்’ திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஏற்கனவே மாளவிகா மோகனன் மற்றும் ஆஷிகா ரகுநாத் இந்த படத்தில் இணைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ரஜிஷா விஜயன் இணைந்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் பிரின்ஸ் பிக்சர்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ரஜிஷா விஜயன் ’சர்தார்’ முதல் பாகத்திலும் நடித்திருந்த நிலையில் அதே கேரக்டரில் தான் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கார்த்தி மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகிய இருவரும் நாயகன், வில்லனாக நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் இன்னும் யாரெல்லாம் இணைகிறார்கள் என்பதை புரிந்து பார்ப்போம்.