ஒரு மணி நேரம் அதகளப்படுத்தும் யோகிபாபு: 'பட்டிபுலம்' படம் குறித்து இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் "பட்டிபுலம்" என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 22ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்திலும் இன்னொரு கேரக்டரில் வீரசமர் என்ற நடிகரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் 'தற்காப்பு' படத்தில் நடித்த அமிதாராவ் நாயகியாக நடித்துள்ளார்.
இந்த படம் குறித்து இயக்குனர் சுரேஷ் கூறியபோது, 'நான் ஷக்திசிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால் காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டை பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன். அந்த பார்முலாவின்படி யோகிபாபுவை இந்த பட்டிபுலத்தில் பயன்படுத்தி கொண்டேன். இந்த படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார்.. அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப்படுத்தி இருக்கிறார்.
கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற ஊரில் உள்ள சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதனால் ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் இந்த படத்தில் நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் சொல்லி இருக்கிறோம்..
ஆர்.கே.வர்மா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு வல்லவன் இசையமைத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com