சிஎஸ்கே உடை இலவசம், ஒரு டம்ளர் தண்ணீர் ரூ.10: பகல்கொள்ளையில் சேப்பாக்கம் மைதானம்
- IndiaGlitz, [Tuesday,April 10 2018]
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அடுத்து பார்வையாளர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அவற்றில் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல கூடாது என்பதும் அடங்கும்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சேப்பாக்கம் மைதானத்தின் உள்ளே இருக்கும் கடைகளில் ஒரு டம்ளர் தண்ணீர் ரூ.10 என விற்பனை செய்து பகல் கொள்ளை நடப்பதாக மைதானத்தில் உள்ள ரசிகர்கள் டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் எந்த கடையிலும் வாட்டர் பாட்டில் விற்பனை இல்லாததால் வேறு வழியின்றி கிரிக்கெட் ரசிகர்கள் ரூ.10 கொடுத்து ஒரு டம்ளர் தண்ணீரை குடித்து வருகின்றனர்.
போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு சிஎஸ்கே உடையை இலவசமாக கொடுக்கும் ஐபிஎல் நிர்வாகம், தண்ணீரையும் இலவசமாக கொடுக்கலாமே என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் காவிரி தண்ணீருக்காக மைதானத்திற்கு வெளியே போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மைதானத்தின் உள்ளே அதே தண்ணீரை வைத்து பகல் கொள்ளை அடிப்பது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.