மீண்டும் துப்பாக்கி சூடு: தூத்துக்குடியில் ஒருவர் பலி
Send us your feedback to audioarticles@vaarta.com
சுற்றுச்சுழலை பாதிக்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் நிலையில் நேற்றைய போராட்டத்தில் வன்முறை வெடித்து போலீசார்களின் துப்பாக்கி சூடு சம்பவத்தால் 11 அப்பாவிகள் பலியாகினர்.
எந்த ஒரு போராட்டத்திலும் போராட்டத்தை தூண்டிவிட்டவர்கள் தப்பித்து கொள்ள அப்பாவி மக்களே பலியாகி வரும் நிலை தூத்துக்குடியிலும் தொடர்ந்தது. போலீசார்களின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலை பலியானவர்களின் உடல்களை அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம் வெடித்தது. தூத்துக்குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு கல்வீச்சு, போலீஸ் வாகனம் எரிப்பு போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடந்தன.
இந்த நிலையில் கலவரக்காரர்களை கலைக்க சற்றுமுன் மீண்டும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இதில் இருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் காயம் அடைந்தவர்களில் ஒருவர் மரணம் அடைந்துவிட்டதாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே நேற்று 11 பேர் பலியானதால் அதிர்ச்சியில் இருக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கு இந்த செய்தி மேலும் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout