கன்னியாகுமரியில் மேலும் ஒரு உயிரிழப்பு: கொரோனா காரணமா?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் திடீரென உயிரிழந்தார். ஆனால் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்றும் அவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்றும் தெரியவந்தது.

இதனையடுத்து தற்போது கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இன்னொருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் ஆனால் அதன் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.

66 வயதான இந்த நபரின் மகன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துபாயில் இருந்து கன்னியாகுமரி வந்துள்ளார் என்பதும், உயிரிழந்த நபரும் கேரளாவில் இருந்து சமீபத்தில் திரும்பி வந்துள்ளார் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி நபர் உயிரிழந்ததை அடுத்து அவரது மகனும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

More News

தாயின் மரணத்திற்கு கூட செல்லாமல் துப்புரவு பணியை தொடர்ந்த அதிகாரி

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் போன்றவர்களின்

கொரோனா வைரஸை விட கொடியது: ஐடி ஊழியரின் அட்டூழியம்

உலகமெங்கும் மிக மோசமாக பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளின் அரசுகளும் தீவிரமாக செயல்பட்டு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கின்றனர்.

மருத்துவமனைகளாக மாறும் இந்திய ரயில்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி

அஜித், விஜய் உள்பட அனைத்து ரசிகர்களுக்கும் காயத்ரி ரகுராமின் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் பரவுவது குறித்த விழிப்புணர்வை கோலிவுட் திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் வீடியோவில் கூறியிருப்பதாவது:

ஞாயிறு முதல் புதிய உத்தரவு: கடைகள் திறந்திருக்க கட்டுப்பாடு

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் காய்கறிகள், மளிகை கடைகள், பால் மற்றும் மருந்து கடைகள்,