ஒருநாள் முழுக்க, ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்க்கிய பரபரப்பு சம்பவம்!!!

  • IndiaGlitz, [Tuesday,August 18 2020]

 

இலங்கையின் முக்கிய மின்சார வழித்தடத்தில் ஏற்பட்ட பாதிப்பால் நேற்று ஒட்டுமொத்த இலங்கையும் இருளில் மூழ்கியிருந்ததாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. கோவாலபிட்டியா பகுதியில் உள்ள துணை மின்வழித்தடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதாகவும் இலங்கையின் மின்சார வாரியம் தகவல் தெரிவித்து உள்ளது.

இச்சம்பவத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானதாகவும் செய்திகள் கூறுகின்றன. சாலைகளில் உள்ள மின்விளக்குகள், சிக்னல் போன்றவை இல்லாமல் போக்குவரத்திலும் கடும் சிரமம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக மருத்துவமனைகளில் இதனால் கடும் பதட்டம் நிலவியிருக்கிறது. 6 மணி நேர போராட்டத்திற்குப்பின் கொழும்பு மற்றும் தெற்கு மாகாணங்களில் மின்சாரம் வந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கையில் இதுபோன்று மின்சாரப் பழுது ஏற்பட்டதில் சதிச் செயல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஏற்பட்ட மின்சாரப் பழுதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என இலங்கையின் மந்திரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார். ஆனால் ஒட்டுமொத்த நாடும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியச் சம்பவம் இலங்கையில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

உங்களுக்கு ஞாபகம் இருக்கா பாலு? எஸ்பிபி குறித்த மலரும் நினைவுகளை பகிந்த பழம்பெரும் நடிகர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகமே அவருக்காக பிரார்த்தனை

அடல்ட் காமெடி படத்தில் அறிமுகமாகும் டிக்டாக் பிரபலம்!

சமூக வலைதளங்களில் பிரபலமாகும் பலர் சினிமாவில் நுழைந்து கொண்டிருக்கும் நிலையில் டிக்டாக் செயலியில் பிரபலமான இலக்கியா, தற்போது திரைப்படமொன்றில் நாயகியாக நடித்து வருகிறார்.

திடீரென இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளை டெலிட் செய்த த்ரிஷா: ரசிகர்கள் குழப்பம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா தனது சமூக வலைகளில் ஆக்டிவாக இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.

3 வயது குழந்தையின் உயிரைப்பறித்த டிவி!!! பரபரப்பு சம்பவம்!!!

சென்னையின் தாம்பரம் அடுத்த சேலையூரில் டிவி மேல் இருந்த செல்போனை எடுக்க முயன்றதால் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி: ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது