ஆபாச பட விவகாரம்: திருச்சியில் முதல் கைது

  • IndiaGlitz, [Thursday,December 12 2019]

ஆபாச படம் பார்த்தவர்களின் பட்டியல் தயாராக இருப்பதாகவும் அவர்கள் முறைப்படி விசாரணை செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவார்கள் என்றும் சமீபத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் ஆபாசப்பட பட்டியலில் உள்ள 3000 பேர்கள் மீது தனித்தனியாக விசாரணை நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது முதல் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

திருச்சியை சேர்ந்த அல்போன்சா என்பவர் சிறுமிகள் ஆபாச படத்தை இணையதளத்தில் பதிவேற்றியதாக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் ஆபாச பட விவகாரத்தில் முதலில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஆபாச படம் பார்த்தவர்கள் மற்றும் பதிவேற்றம் செய்பவர்கள் இன்னும் பலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் மற்றும் பதிவேற்றியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்ததை அடுத்து ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது