மீண்டும் மெரினாவில் போராட்டமா?

  • IndiaGlitz, [Saturday,March 31 2018]

ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரீனாவில் நடந்த இளைஞர்களின் போராட்டம் உலகமே வியக்க்கும் வகையில் நடந்தது. அனேகமாக தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே போராட்டம் என்று இதனை கூறலாம். இந்த போராட்டத்தை கண்டு அதிர்ந்த அன்றைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக டெல்லிக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து ஜல்லிக்கட்டு தடைக்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்

ஆனால் அதன் பின்னர் மேலும் ஒரு மெரீனா போராட்டம் நடைபெறாத வகையில் போலீசார் அறிவுறுத்தப்பட்டனர். விவசாயிகள் பிரச்சனை, நெடுவாசல் பிரச்சனைக்காக மெரினாவில் இளைஞர்கள் கூடியபோது ஆரம்பத்திலேயே அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் பிர்ச்சனை, தேனி நியூட்ரியோனா பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை உள்பட பல பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் உச்சகட்டத்தில் நடந்து வருவதால் இன்று மாலை ஒருசில இளைஞர்கள் மெரினாவிலும் போராட்டம் நடத்தவுள்ளதாக போலீசாருக்கு தகவல்கள் வந்தது. இதனையடுத்து உடனடியாக மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க காற்று வாங்க வரும் பொதுமக்களளயும் போலீசார் சந்தேகக்கண்களுடன் பார்த்து வருவதால் மெரினாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

கால்கள் இழந்த காதலனை கைப்பிடித்த காதலி: இதுவல்லவோ உண்மை காதல்

காதலுக்கு கண்ணில்லை என்றும், காதல் உடல் சார்ந்தது அல்ல மனம் சார்ந்தது என்றும் சினிமாவில் தான் வசனம் பேசமுடியும், நடைமுறை வாழ்க்கைக்கு அது ஒத்துவராது என்று பலர் கூறுவதுண்டு

மனைவி அடிக்க ஆரம்பித்துவிட்டால் கணவரால் எதுவும் செய்ய முடியாது: ஷிகர்தவான்

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷிகர்தவான் மிகச்சிறந்த ஒப்பனிங் பேட்ஸ்மேன் என்பது தெரிந்ததே. ஆனால் அவர் பவுலிங் போட்ட பந்தை ஒரு பெண் வெளுத்து வாங்கியுள்ளார்.

பிறமொழி படங்களுக்கும் செக் வைப்பாரா விஷால்?

தமிழ் திரையுலகில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒற்றுமையுடன் கடந்த ஒரு மாதமாக வேலைநிறுத்தம் நடந்து வருகிறது

சிவகார்த்திகேயன் கொடுத்த இரண்டு உறுதிமொழிகள்

இனிமேல் தனது படங்களில் டாஸ்மாக் காட்சிகள் இருக்காது என்று சிவகார்த்திகேயன் உறுதியளித்துள்ளார்.

காவிரியை அடுத்து ஸ்டெர்லைட் பிரச்சனைக்கும் குரல் கொடுத்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறிய கருத்தை ஏற்கனவே பார்த்தோம்.