வணிக வளாகத்தில் சின்சியராக காவல் காக்கும் அதிநவீன “ரோபா” காவலாளி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐக்கிய அரபு எமிரேட்டிஸில் அதிநவீனத் தொழில்நுட்ப இயந்திரங்களின் பயன்பாடு எப்போதும் அதிகம். தற்போது கொரோனா கால பாதுகாப்பிற்காக அதிநவீன ரோபோக்களின் பயன்பாடு துபாய், அபுதாபி போன்ற நகரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதிலும் அபுதாபில் இருக்கும் யாஸ் மால் என்ற மிகப்பெரிய வணிக வளாகத்தில் அதிநவீன ரோபோ காவலாளி ஒன்று பணிக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த அதிநவீன ரோபோ காவலாளி மாலுக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா எனக் கண்காணித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கிறது.
மேலும் வணிக வளாகத்திற்கு வரும் நபர்களின் உடல் வெப்பநிலையைத் துல்லியமாகக் கணித்துக் கொடுக்கவும் செய்கிறது. அதைத்தவிர சந்தேகத்திற்குரிய வகையில் துணி, பை போன்ற பொருட்கள் கீழே கிடந்தாலோ அல்லது மழை, வெள்ளம், புகை, நெருப்பு போன்ற ஆபத்தான தருணங்கள் இருந்தாலோ அதையும் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்துகிறது.
கொரோனா கால பாதுகாப்பு நடவடிக்கைக்காக பணிக்கு அமர்த்தப்பட்டு இருக்கும் இந்த நவீன ரோபோவின் முகத்தில் மட்டும் 12 காமிராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறதாம். இந்தக் காமிராக்களின் வழியாக முகக்கவசம் அணியாத நபர்களை அதிகாரிகளுக்குக் காட்டிக் கொடுத்து விடுகிறது. மேலும் 4 சக்கர வாகனங்களில் வலம் வரும் இந்த ரோபோக்கள் வழித்தவறி நிற்பவர்களுக்கு சரியான வழியையும் தனது இனிமையான குரலில் தெரிவிக்கிறது. ரோபோ செல்லும் வழியில் யாராவது நின்றால் அதையும் தெரிந்து கொண்டு நகர்ந்து செல்லும் நுண்ணுர்வு இந்த ரோபோவுக்கு இருக்கிறதாம். மனிதக் கண்டுபிடிப்புகள் மனிதனது தலையாயப் பாதுகாப்புக்குத்தான் என்பதை இந்த ரோபோக்கள் இன்னொரு முறை நிரூபித்து இருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments