கொரோனாவிற்கும் ஒமிக்ரானுக்கும் தொடர்பே இல்லையா? இது புதிய வைரஸ் தாக்கமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த நவம்பர் மாதம் முதல் உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ்க்கும் கொரோனா வைரஸ்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை. காரணம் உருமாறிய கொரோனா வைரஸ் வரிசையில் இருந்து ஒமிக்ரான் முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது. இதனால் ஒமிக்ரான் மற்றும் முதலில் அறியப்பட்ட கொரோனா என இருவேறு வைரஸ் தாக்குதலில் நாம் சிக்கி தவித்து வருகிறோம் என்ற தகவலை விஞ்ஞானி ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். இந்தத் தகவல் தற்போது புதிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019 டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டதுதான் கொரோனா SARS-Covid-19 வைரஸ். இதன் மரபணு குறியீடு D614G. இந்த மரபணுவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு ஆல்பா, பீட்டா காமா, டெல்டா, கப்பா என உருமாறிய கொரோனா வைரஸ்கள் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தன. அந்த வரிசையில் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
ஆனால் தற்போது ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, கப்பா எனும் உருமாறிய கொரோனா வைரஸில் இருந்து ஒமிக்ரான் முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது எனும் தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வைராலஜிஸ்ட் டாக்டர் ஜேக்கப் ஜான் வெளியிட்டு உள்ளார். மேலும் கொரோனா வைரஸ்கள் பொதுவாக நுரையீரலைத்தான் தாக்குகின்றன. ஆனால் ஒமிக்ரான் தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் உருமாறிய கொரோனா வைரஸ்களில் இருந்து ஒமிக்ரான் முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் சீனாவில் தோன்றிய முதல் கொரோனா வைரஸின் மரபணு D614G உடன் இந்த ஒமிக்ரான் தொடர்பு கொண்டிருக்கிறதே தவிர உருமாறிய ஆல்பா, பீட்டா, காமா வரிசையில் இருந்து முற்றிலும் வேறுபட்டு காணப்படுகிறது. இதனால் ஒமிக்ரான் வைரஸை உருமாறிய வைரஸ் பட்டியலில் வைத்துப் பார்க்க முடியாது. நாம் புதிய வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிப்பை அனுபவித்து வருகிறோம் என டாக்டர் ஜேக்கப் ஜான் தெரிவித்து உள்ளார். இந்தத் தகவல் தற்போது சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோய்த்தொற்று பதிவாகியுள்ளது. இதில் 74 ஆயிரத்திற்கும் அதிகமான ஒமிக்ரான் பதிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ்களோடு தொடர்புடையது அல்ல. அது புதிய வைரஸ் பாதிப்பு என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வைராலஜிஸ்ட் டாக்டர் ஜேக்கப் ஜான் தெரிவித்து இருப்பது கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com