ஆதார் குறித்து இன்னொரு அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்கள் பாதுகாப்பாக இல்லை என்றும், ரூ.500 கொடுத்தால் ஆதார் அட்டையில் உள்ள விபரங்கள் தெரிவிக்கப்படும் மற்றும் மாற்றப்படும் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆனால் ஆதார் நிறுவனம் இந்த செய்திகளை மறுத்து வருகிறது
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது எந்த ஒரு மொபைல் எண்ணில் இருந்தும் *99*99*1# என்ற எண்ணுக்கு டயல் செய்து எந்த ஒரு ஆதார் எண்ணையும் பதிவு செய்தால், அந்த ஆதார் எண் எந்த வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்கிற விபரம் வருகிறது. இதனால் ஒருவரது ஆதார் எண் என்ன என்பது தெரிந்தால் போதும், அவர் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றார் என்ற விபரத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த தகவல் ஆதார் எண் எந்த அளவுக்கு பாதுகாப்பின்மையாக உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.
இந்த தகவல் வெளியானதில் இருந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆதார் அட்டையை அனைத்து ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையை அதன் பாதுகாப்பிலும் செலுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments