அங்கோவார்ட் கோவிலில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்

  • IndiaGlitz, [Tuesday,October 27 2015]

கடந்த 2007ஆம் ஆண்டு பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன படம் 'ஓம் சாந்தி ஓம்'. ஷாருக்கான் நடித்த இந்த படத்தின் பெயரில் தமிழில் ஒரு படம் தயாராகி வருவது தெரிந்ததே. ஆனால் ஷாருக்கானின் படத்திற்கும் இந்த படத்திற்கும் டைட்டிலை தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை என இந்த படத்தின் இயக்குனர் சூர்யபிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஹீரோயின் நீலம் உபதாயின் பெயர் சாந்தி என்றும், அதன் காரணமாகவே இந்த படத்திற்கு அந்த டைட்டிலை வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்

மேலும் உலகின் மிகப்பெரிய இந்து கோவில் கம்போடியாவில் உள்ள அங்கோவார்ட் கோவில் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கோவிலில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் 'ஓம் சாந்தி ஓம்' என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இந்த கோவிலில் படப்பிடிப்பு நடத்த எளிதில் அனுமதி கிடைக்காது என்றும், ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் அருமைசந்திரன் அவர்களுக்கு கம்போடியாவில் நிறைய நண்பர்கள் இருந்ததால், அவர்களின் உதவியோடு இந்த கோவிலில் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தது என்றும் இந்த மூன்று நாட்களில் இந்த கோவிலில் ஒரு பாடலை படமாக்கியதாகவும் இயக்குனர் சூர்யபிரபாகர் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த படம் பேய்க்கதையாக இருந்தாலும் குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் படைக்கப்பட்டுளதாகவும், இந்த படத்தின் நாயகன் தீய ஆவிகளின் ஆசையை நிறைவேற்றி அந்த ஆவிகளை திருப்தி செய்யும் கேரக்டரில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் எபினேசர் இசையமைக்கும் இந்த படம் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.