லாரி டிரைவர்களுக்கு விருந்து வைத்த ஒலிம்பிக் வீராங்கனை… கண்ணீர் சிந்த வைக்கும் காரணம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டோக்கியோ ஒலிம்பிக் 2021 இல் இந்தியாவிற்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கொடுமையான வறுமை சூழ்நிலையில் வளர்ந்து வந்ததைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டில் கடைக்குட்டியான இவர் தினமும் 25 கிலோ மீட்டர் தூரம் பயணித்து விளையாட்டு பயிற்சிக்குச் செல்ல வேண்டி இருந்ததாம்.
ஏற்கனவே விறகு வெட்டி வாழ்ந்துவரும் குடும்பப் பின்னணியைக் கொண்ட மீராபாய் சானுவிற்கு இது பெரும் சவாலாக இருந்திருக்கிறது. எனவே தன்னுடைய சொந்த ஊரான இம்பால் மாவட்டம் நோங்போங் கக்சிங் எனும் கிராமம் வழியாகச் செல்லும் நூற்றுக்கணக்கான மணல் லாரிகளில் லிஃப் கேட்டு தினமும் பயணித்து, மீராபாய் சானு தனது பயிற்சி கூடத்திற்கு சென்றிருக்கிறார்.
மேலும் இந்த லிஃப்ட் ஒருநாள், இரண்டு நாள் அல்ல, வருடக்கணக்கில் நடந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சொந்த நாட்டிற்கு திரும்பியவுடன் முதல் முறையாக தனக்கு லிஃப்ட் கொடுத்த 150 க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்களையும் க்ளீனர்களையும் தனது வீட்டிற்கு வரவழைத்து விருந்து வைத்திருக்கிறார்.
கூடவே அவர்களுக்கு சட்டை மற்றும் மணிப்பூர் ஸ்கார்ப்களை பரிசாக கொடுத்துள்ளார். இதுகுறித்த பேசிய மீராபாய் சானு எனது கடினமான காலங்களில் இந்த லாரி ஓட்டுநர்கள்தான் எனக்கு உதவினார்கள். நான் இப்போது அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறேன். எனது பயணத்தில் உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று கண்ணீர் மல்கத் தெரிவித்து இருக்கிறார். மீராபாய் சானுவின் இந்த செய்கை தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
What a kind gesture by our Olympic medalist @mirabai_chanu
— Rahul Trehan (@imrahultrehan) August 5, 2021
Today she rewarded truck drivers in Imphal who use to give her lift from home to sports academy during her early training days. Her home was more than 25 km from the Academy & there was no means of transport those days. pic.twitter.com/lxmpej8E3m
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments