OLX மூலம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி.. தீரன் படம் போல் முகாமிட்டு பிடித்த தமிழக போலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்ற இடத்தில் துநாவல் என்ற கிராமமே வங்கி மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தீரன் பட பாணியில் ஏடிசி சரவண குமார் தலைமையில் சென்ற தனிப்படை போலீசார், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் ஒரு வாரம் முகாமிட்டு துநாவல் கிராமத்தில் இருந்த இருவரை கைது செய்துள்ளனர். கிராமத்தில் ஓஎல்எக்ஸ் கொள்ளையர்களைப் பிடிக்கும் போது அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பின்னர், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக போலீசார் அந்த இருவரை கைது செய்துள்ளனர். நரேஷ் பால் சிங், பச்சு சிங் ஆகிய இருவரை கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தமிழக போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்.
ராணுவ அதிகாரி எனக்கூறி பொருட்களை விற்பனை செய்யும் தளமான OLX மூலமாக பொருட்களை விற்பதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் இந்தியா முழுவதும் மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கொள்ளையடித்த பணத்தை கிராமமே பங்கிட்டு சொகுசாக வாழ்ந்து தெரியவந்துள்ளது. சென்னையில் மட்டும் நூற்றுக்கணக்கான புகார்கள் பதிவாகியுள்ளன. பணப்பரிவர்த்தனை செயலி மூலம் அனைவரிடமும் கொள்ளை அடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com