சத்தமே இல்லாமல் அசுர வளர்ச்சி… இந்தியாவிலும் ஒரு குட்டி டெஸ்லா!
- IndiaGlitz, [Thursday,January 06 2022]
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது எலக்ட்ரிக் கார் உற்பத்தியால் உலக வர்த்தகத்தையே தற்போது ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் ஹைத்ராபாத்தில் எலக்ட்ரிக் பேருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்று சத்தமே இல்லாமல் ஒரே வருடத்தில் அசுர வளர்ச்சியை அடைந்திருக்கும் தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
காலநிலை மாற்றத்தை கவனத்தில் கொண்ட பெரும்பாலான உலக நாடுகள் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்திற்கு முன்னுரிமை அளித்து வருகின்றன. இதனால் எலக்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் உலக வர்த்தகத்தில் கணிசமான அளவு அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் விற்பனையாகும் 40% எலக்ட்ரிக் பேருந்துகளை ஹைத்ராபாத்தில் உள்ள Olectra Greentech எனும் நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது.
ஹைத்ராபாத்தில் கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் ஒரே வருடத்தில் 540% வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் அதன் பங்கு சந்தை மதிப்பு உயர்ந்திருப்பதோடு இதுவரை 2,000 எலக்ட்ரிக் பேருந்து உற்பத்தி செய்து கொடுத்திருக்கிறது. மேலும் 6,000 பேருந்துகள் உற்பத்திக்கான ஒப்பந்தத்தில் இந்நிறுவனம் கையெழுத்திட்டு இருக்கிறது
மேலும் இந்த ஒலெக்ட்ரா க்ரீன்டெக் நிறுவனம் சீனாவை சேர்ந்த Auto BYD எனும் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பேருந்துகளை தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.