சிகிச்சை பெற்று வரும் மூதாட்டிக்கு மருந்தாக உதவிய 'அரபிக்குத்து' பாடல்” வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் படத்தின் பாடல் என்றால் உறுதியாக ஹிட்டாகி விடும் என்பதும் 6 முதல் 60 வயது வரை உள்ள அனைவருக்கும் பிடித்த பாடலாக அது மாறிவிடும் மேஜிக் என்பதையும் கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ‘அரபிக்குத்து’ பாடல் 60 வயது மூதாட்டி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு மருந்தாக மாறி உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக்குத்து’ பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடல் யூ டியூபில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை செய்து வருகிறது என்பதும் யூடியூப் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டி ஒருவர் இந்த ‘அரபிக்குத்து’ பாடலை பார்த்து தலையை ஆட்டி ரசிக்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ‘அரபிக்குத்து’ பாடலின் வரிகள் புரியாவிட்டால் என்ன? விஜய் ஒருவர் மட்டும் போதும் அந்த பாடல் ஹிட்டாக’ என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.
ஏற்கனவே விஜய்யின் ‘செல்ஃபி புள்ள’ பாடலும் இதேபோல் மருத்துவமனையில் உள்ள நோயாளி ஒருவரின் சிகிச்சைக்கு உதவியதாக கூறப்பட்டது. அதேபோல் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை செல்போனில் காட்டி தான் 10 வயது சிறுவன் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ததாக மருத்துவர் ஒருவர் பேட்டி அளித்திருந்தார் என்பது தெரிந்ததே.
Arabic lyrics! Can't understand what's the exact meaning of the lyrics. So what? The actor is VIJAY. That's enough. From 6 to 60 he is attracting everyone. BRAND @actorvijay ?? #Beast #ArabicKuthu#RecordBreakingARABICKUTHU pic.twitter.com/EXWfBV1m53
— Gu Ru Thalaiva (@GuRuThalaiva) February 15, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com