கஞ்சாவை வைத்து வழிபாடு செய்த பழங்கால இஸ்ரேலியர்!!! தொல்பொருள் ஆய்வு வெளியிட்டுள்ள சுவாரஸியத் தகவல்!!!

  • IndiaGlitz, [Saturday,May 30 2020]

 

உலகின் அனைத்து பழமையான வழிபாடுகளிலும் சில நேரங்களில் மதுப்பொருட்கள் பயன்படுத்தப் படுவது உண்டு. இதற்குக் காரணம் அன்றைய வாழ்க்கையில் ஒரு இன்றியமையாதப் அம்சமாக மதுவும் இருந்திருக்கிறது. சில சமயங்களில் நாட்டுப்புறங்களில் நடைபெறும் பெரியவர்களுக்கான வழிபாடுகளில் சுருட்டு, சாராயம், கோழிக்கறி, ஆட்டுக்கறி எனப் பலவிதமான பலகாரங்களையும் பார்க்க முடியும். அப்படி பழங்கால இஸ்ரேலியர் ஒரு வித்தியாசமான வழிபாட்டு முறையை கொண்டிருந்ததைப் பற்றி பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

2,700 ஆண்டு பழமையான யூத வழிபாட்டு கோவில் ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் 1960 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். இந்தக் கோவில் தெற்கு டெல் அவில் பகுதியில் அமைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தக் கோவிலில் நடைபெற்ற பழமையான வழிபாட்டில் கஞ்சா இலைகளை வைத்து எரித்து அதிலிருந்து வெளிவந்த புகையில் வழிபாட்டை நடத்தியிருப்பது பற்றி தற்போது தொல்பொருள் ஆய்வாளர்கள் சில சுவாரஸியமான தகவல்களை வெளியிட்டு உள்ளனர். அந்தக் கோவில் பழமையான யூத வழிபாட்டு முறையிலானது என்றும் பழமையான வழிபாடுகளில் இப்படி மதுப் பொருட்கள் கண்டுபிடிக்கப் படுவது இதுவே முதல் முறை எனவும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.