உணவு கடைகளாக மாறும் பழைய பேருந்துகள்: அரசின் அசத்தல் திட்டம்
- IndiaGlitz, [Saturday,October 03 2020]
15 வருடத்திற்கு மேலான பழைய பேருந்துகளை உணவு கடைகளாக மாற்றும் திட்டம் ஒன்றை கேரள அரசு கொண்டுவந்துள்ளது
கேரளாவில் பழைய பேருந்துகளுக்கு பராமரிப்பு செலவு அதிகம் என்பதும் அந்தப் பேருந்துகளால் அதிக எரிபொருள் செலவாகிறது என்பதால் பழைய பேருந்துகள் தற்போது உணவுக்கடைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. ஐஸ்கிரீம், கேக், பீடா உள்ளிட்ட பொருட்களை விற்கும் நவீன உணவுகடைளாக பேருந்துகள் மாற்றப்பட்டுள்ளதற்கு அம்மாநில மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்
பழைய பேருந்துகள் நவீன வகை உணவு கடைகள் ஆக மாற்றப்பட்டு அதில் சுகாதாரமான முறையில் உணவுகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த புதிய முயற்சி செப்டம்பர் 22 முதல் இயங்கி வருவதாகவும், இந்த உணவு பேருந்துகள் காலை 5 மணி முதல் 9 மணி வரை வரை வாடிக்கையாளர்களுக்கு செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த புதிய முயற்சிக்கு கேரள மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ள நிலையில் மேலும் பல பழைய பேருந்துகளை உணவுப் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை விற்கும் கடைகளாக மாற்றம் செய்ய கேரள அரசு திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கேரளாவில் மட்டுமின்றி தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களிலும் இதே போல் பழைய பேருந்துகளை நடமாடும் உணவுக் கடைகளாக மாற்றலாம் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது