அடடா இந்த கேரக்டரை மிஸ் பண்ணிட்டமே... நான் வாய்ப்பு தேடி இயக்குனர் வீட்டு வாசலுக்கு சென்றதில்லை
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜே ஜே, கே.ஜி. எப் போன்ற தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், அண்ணி தமிழ் சீரியலிலும் நடித்து மிகவும் பிரபலமானவர் மாளவிகா அவினாஷ்.
Indiaglitz நேயர்களுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி....
அழகு நிரந்தம் இல்லை. என்னுடைய இளமை காலங்களில், கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், செம்பருத்தி அரைத்து பூசிக்கொள்வது என இதையெல்லாம் செய்து அழகை பராமரித்து கொண்டோம்.அப்போது எங்களுக்கு நேரமும் இருந்தது. இன்று உள்ளதுபோல் அன்று சுதந்திரமும் இல்லை.
அழகு, தலைமுடி இது எல்லாம் ஒரு நாள் நம்மை விட்டு போக்கக்கூடியது. அதற்கெல்லாம் கவலை கொள்ளக்கூடாது.
அரசியல்தான் என் முதல் விருப்பம். நடிப்பிற்கு வந்தது ஒரு விபத்து. எனக்கு சின்ன வயதிலிருந்து அரசியலில் ஆர்வம். அதனால்தான் நான் சட்டம் பயின்றேன்.
முன்பு எல்லாம், போட்டோஜெனிக் என்று ஒன்று இருந்தது. கொஞ்சமாவது பார்க்க சுமாரா இருந்தாதான் நடிக்க வரலாம். இப்போ அப்டி இல்ல, plastic surgery பண்ணிக்கலாம். மூக்கை மாத்திக்கலாம். கழுத்தை திருப்பிக்கலாம். அப்போ அப்டி இல்லை.
என் மகன் special child. மூணு வேலையும் அவனுக்கு சாப்பாடு ஊட்டணும் . அவனுக்கா சாப்பிட தெரியாது. நாங்க ஒரு முடிவு பண்ணினோம். வீட்டில யாரவது ஒரு ஆள் கட்டாயமா அவன் கூட இருக்கணும். ஷூட்டிங் போறதுனாகூட இரவு 9 மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடனும்.
இவ்வாறு இந்த பேட்டியில் அவர் பேசியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Mithra Anjali
Contact at support@indiaglitz.com