'ஓ மை கடவுளே' வாணி போஜனால் பாதிப்பு அடைந்த தொழிலதிபர்: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,March 10 2020]

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. அசோக்செல்வன், ரித்திகாசிங், ரக்சன், வாணிபோஜன் நடித்த இந்த படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த நிலையில் ’ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவரான வாணி போஜனை கேட்டு தனக்கு அதிகமான தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் இதனால் தான் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை எம்கேபி நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பூபாலன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக ஒரே மொபைல் எண்ணை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ’ஓ மை கடவுளே’ படத்தில் தனது செல்போன் எண்ணை கதாநாயகி வாணிபோஜன் கூறுவது போன்ற காட்சி உள்ளது என்றும், அந்த படத்தில் வாணி போஜன் கூறிய மொபைல் எண் தன்னுடையது என்றும், இந்த காட்சியால் நடிகை வாணி போஜனை கேட்டு, தினந்தோறும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் தனக்கு வருவதாகவும் தன்னுடைய அனுமதியின்றி தனது மொபைல் எண்ணை பயன்படுத்திய படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பூபாலன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ‘ஓ மை கடவுளே’ படக்குழுவினர் என்ன விளக்கம் அளிக்கவுள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அண்ணன் வந்தா ஆட்டம்பாம்: வைரலாகும் 'வாத்தி' பாடல்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்ட'ர் படத்தில் இடம்பெற்ற 'வாத்தி இஸ் கம்மிங்' என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சரியாக 5 மணிக்கு வெளியாகி இணையதளங்களை

துப்புரவு பணியாளர் வேலையில் சேர்ந்த எம்.எஸ்.சி படிக்கும் பெண்..!

இந்த விழாவில் கோவை தெலுங்குப்பாளையாத்தைச்  சேர்ந்த மோனிகா என்பவருக்கு பணிநியமன ஆணையானது வழங்கப்பட்டது. இவர் எம்.எஸ்.சி படித்து வருகிறார்.

யார் இந்த ஜோதிராதித்ய சிந்தியா??? காங்கிரஸ்க்கு எதிராகத் திரும்பியது ஏன்??? 

மத்தியப் பிரதேச சட்ட சபையில் முதல்வர் கமல்நாத்தின் ஆட்சி தொடருமா? என்பது தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்

நடிகர் சங்கத் தேர்தல்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த நிலையில் அந்த தேர்தல் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் புதிய தேர்தலை 3 மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்

கூவி..கூவி.. விற்கப்படும் கொரோனா. சிரிக்காம பாருங்க இந்த வீடியோவை..!

வியாபாரி ஒருவர் முகத்திற்கு அணியும் மாஸ்குகளை கொரோனா கொரோனா என கூவி கூவி விற்று வருகிறார்.