வாரிசு நடிகருக்கு ஜோடியாகும் 'ஓ மை கடவுளே' வாணிபோஜன்!

  • IndiaGlitz, [Thursday,August 06 2020]

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை வாணி போஜன், அதன் பின்னர் அசோக் செல்வனின் ’ஓ மை கடவுளே’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த படம் பெற்ற மாபெரும் வெற்றி காரணமாக அவருக்கு ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சிவாஜி குடும்பத்தின் வாரிசான விக்ரம்பிரபு நடிக்கும் அடுத்த படத்தில் வாணிபோஜன் நாயகியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் பிரசன்னா என்பவர் இயக்க இருப்பதாகவும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விக்ரம் பிரபு, மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.