யூ-டர்ன் தமிழ் ரீமேக்கில் திடீர் மாற்றம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆகிய யூடர்ன் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை 'சைத்தான்' 'சத்யா' படங்களை இயக்கிய பிரதீப் இயக்கவுள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த செய்தியை பிரதீப் மறுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தை கன்னடத்தில் இயக்கிய பவன்குமார் தமிழிலும் இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் ஷராதா ஸ்ரீநாத் நடித்த பரபரப்பான பத்திரிகையாளர் கேரக்டரில் நயன்தாரா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சமந்தா நடிக்கவுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
நடிகை சமந்தா ஏற்கனவே விஷாலின் 'இரும்புத்திரை', தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம் மற்றும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான 'நடிகையர் திலகம்' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் 'யூடர்ன்' ரீமேக் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments