யூ-டர்ன் தமிழ் ரீமேக்கில் திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Saturday,December 09 2017]

கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆகிய யூடர்ன் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை 'சைத்தான்'  'சத்யா' படங்களை இயக்கிய பிரதீப் இயக்கவுள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த செய்தியை பிரதீப் மறுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தை கன்னடத்தில் இயக்கிய பவன்குமார் தமிழிலும் இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் ஷராதா ஸ்ரீநாத் நடித்த பரபரப்பான பத்திரிகையாளர் கேரக்டரில் நயன்தாரா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சமந்தா நடிக்கவுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது

நடிகை சமந்தா ஏற்கனவே விஷாலின் 'இரும்புத்திரை', தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம் மற்றும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான 'நடிகையர் திலகம்' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் 'யூடர்ன்' ரீமேக் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் தமிழ்ப்படங்கள்

சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி

நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு தமிழகத்தின் ஆளும் அரசே காரணம் என்று விஷால் தரப்பினர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வரும் நிலையில்

ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் ரத்தா? எஸ்.வி.சேகர் டுவீட்டால் பரபரப்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து தற்போது தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில்

ஆர்.கே.நகர் தேர்தலை கலகலக்க வைத்த 'மதுரவீரன்' பாடல்

சண்முகப்பாண்டியன் நடித்து வரும் 'மதுரவீரன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற 'என்ன நடக்குது நாட்டுல' என்ற சிங்கிள் பாடல் வெளிவந்தது.

விஷால் மனுவை நிராகரித்த அதிகாரி திடீர் மாற்றம்

ஆர்.கே.நகரில் போட்டியிட மனுதாக்கல் செய்த விஷாலின் மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி திடீரென மாற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது