நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 08 2017]

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்றால் சிவாஜி கணேசனை குறிப்பிடுவது போல நடிகையர் திலகம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது நடிகை சாவித்திரி தான். இன்றும் கூட பல நடிகைகள் சாவித்திரியின் நடிப்பை பின்பற்றி நடித்து வருகின்றனர்.

1950கள் மற்றும் 60களில் தொடங்கி தொடர்ந்து முப்பது ஆண்டுகள் திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர் சாவித்திரி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

இத்தகைய மாபெரும் நடிகையை போற்றும் வகையில் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது. சாவித்திரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சமந்தா நடிக்கின்றார். நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு 'நடிகையர் திலகம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இன்றைய தலைமுறையினர் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் வலுவான திரைக்கதையுடன் உருவாகவுள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.

More News

2 முக்கிய பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து கூறிய கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்தாலும் நேற்று பெங்களூரில் முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது....

ரூ.50 மினிமம் பேலன்ஸ், பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை. வங்கிகள் கெடுபிடியால் மவுசு கூடிய அஞ்சலகங்கள்

தனியார் வங்கிகள் மட்டுமின்றி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும் மினிமம் பேலன்ஸ் உள்பட பல்வேறு நிபந்தனைகளை வாடிக்கையாளர்களுக்கு விதித்து வருகிறது. சேமிப்பு கணக்குகளில் ரூ.5000 மினிமம் பேலன்ஸ் மற்றும் 4 முறைக்கு மேலான பரிவர்த்தனைக்கு கட்டணம் என புதிய நிபந்தனைகளை வங்கிகள் சமீபத்தில் அறிவித்தன...

வரலட்சுமியின் 'சேவ் சக்தி' திட்டத்திற்கு விஷால் உள்பட நடிகர் நடிகையர் ஆதரவு

நடிகை பாவனாவுக்கு நேர்ந்த பாலியல் சம்பவத்திற்கு பின்னர் பெண் கலைஞர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகை வரலட்சுமி ஆரம்பித்த அமைப்புதான் 'சேவ் சக்தி.

ஓபிஎஸ் உண்ணாவிரத மேடையில் தனுஷ், விஜய் ஆண்டனி பாடல்கள்

முன்னாள் முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்