நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தின் டைட்டில் அறிவிப்பு
- IndiaGlitz, [Wednesday,March 08 2017]
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்றால் சிவாஜி கணேசனை குறிப்பிடுவது போல நடிகையர் திலகம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது நடிகை சாவித்திரி தான். இன்றும் கூட பல நடிகைகள் சாவித்திரியின் நடிப்பை பின்பற்றி நடித்து வருகின்றனர்.
1950கள் மற்றும் 60களில் தொடங்கி தொடர்ந்து முப்பது ஆண்டுகள் திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர் சாவித்திரி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
இத்தகைய மாபெரும் நடிகையை போற்றும் வகையில் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது. சாவித்திரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சமந்தா நடிக்கின்றார். நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு 'நடிகையர் திலகம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இன்றைய தலைமுறையினர் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் வலுவான திரைக்கதையுடன் உருவாகவுள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.