விஜய்சேதுபதி-த்ரிஷாவின் '96' படத்தின் பூஜை தேதி மற்றும் நேரம்

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விஜய்சேதுபதியும், கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் நாயகியாக வலம் வரும் த்ரிஷாவும் முதல்முறையாக இணையும் திரைப்படம் '96'

விஜய்சேதுபதியின் வெற்றி படங்களில் ஒன்றான 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கவுள்ள இந்த படத்தை நந்தகோபால் தயாரிக்கவுள்ளார். இந்த படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைக்கின்றார்.

இந்த படத்தின் பூஜை காதலர் தினமான இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. படப்பிடிப்பு தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

விஜய்சேதுபதி ஏற்கனவே 'புரியாத புதிர்', கவண், விக்ரம் வேதா, கருப்பன் போன்ற படங்களிலும், த்ரிஷா ஏற்கனவே 'சதுரங்க வேட்டை 2', 'கர்ஜனை', '1818' போன்ற படங்களிலும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. மொத்த எண்ணிக்கை 9 ஆனது

முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு ஏற்கனவே 8 எம்.எல்.ஏக்களும், 12 எம்பிக்களும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் சற்று முன்னர் மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். இதனால் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது...

சசிகலா வழக்கு தீர்ப்பு எதிரொலி: ஈசிஆரில் போக்குவரத்து திடீர் நிறுத்தம்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உள்பட மூவர் சம்பந்தப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 அறிவிக்கப்படவுள்ளதாக சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ-எம்பி. மொத்த எண்ணிக்கை 8-12 ஆனது

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் கடந்த வாரம் ஜெயலலிதா நினைவகத்தில் அரை மணி நேரம் செய்த தியானம், தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பிவிட்டது

நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

ஜெயலலிதா, சசிகலா உள்பட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ள் நிலையில் இந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை அறிய தமிழக மக்கள் மட்டுமின்றி நாடே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றது.

இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஓபிஎஸ்-ராகரா லாரன்ஸ் சந்திப்பு

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு என்று விடை கிடைக்கும் என்று தமிழக மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இரு அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுக தலைவர்கள் சசிகலாவுக்கும், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.