தூங்காவனம்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,September 04 2015]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள 'தூங்காவனம்' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தேதியை வெள்ளிக்கிழமை வெளியாகும் புதிய போஸ்டரின் மூலம் அறிவிக்கப்பட்டும் என கவுதமி ஏற்கனவே கூறியிருந்தார் என்பதை பார்த்தோம். அதன்படி நேற்று வெளியான 'தூங்காவனம்' படத்தில் புதிய போஸ்டரில் இந்த படத்தின் டிரைலர் வரும் 16ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் கையில் ஒரு பேக் வைத்துக்கொண்டு ஸ்டைலாக நிற்கும் இந்த ஸ்டில் ஹாலிவுட் பாணியில் அமைந்துள்ளதாக பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஒரே ஒரு போஸ்டரே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டதாகவும், 16ஆம் தேதி வெளிவரும் டிரைலர் கண்டிப்பாக எதிர்பார்ப்பை எகிற வைக்கும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசனிடம் நீண்ட நாட்கள் உதவியாளராக இருந்த ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர் சம்பத், ஆஷா சரத், உமா ரியாஸ்கான், யூகிசேது, மதுஷாலினி, மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை சுமார் ரூ.50 கோடி செலவில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வரும் தீபாவளி தினத்திலோ அல்லது அதற்கு முன்போ ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.