நோபல் பரிசு பெற்றவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பாலிவுட்-ஹாலிவுட் கலைஞர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாக கொண்டு இந்திய குடியுரிமை பெற்ற சமூக சேவகர் அன்னை தெரசா பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. 1950 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் 'பிறர் அன்பின் பணியாளர்' என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவிய அன்னை தெரசா 45 வருடங்களுக்கும் மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றினார்.
இந்த நிலையில் அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படம் எடுக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவின் திரைப்படத்தை சீமா உபத்யாய் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். அதேபோல் ஹாலிவுட், பாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தில் பணியாற்றவுள்ளனர். இதுகுறித்த முழு விபரங்கள் இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. 'Mother Therasa The Saint' என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படம் வரும் 2010ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments