சூர்யா படத்தில் ஆர்யா! உறுதி செய்த ஆனந்த்

  • IndiaGlitz, [Wednesday,July 04 2018]

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூர்யா 37' படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது. இந்த படத்தில் ஏற்கனவே மோகன்லால், அல்லுசிரிஷ், சமுத்திரக்கனி , பொமன் இரானி ஆகிய பிரபல நடிகர்கள் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் ஆர்யாவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் இதற்காக அவர் லண்டன் சென்றிருப்பதாகவும் வெளிவந்த தகவல்களை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இந்த தகவலை இயக்குனர் கே.வி.ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இருப்பினும் ஆர்யா, இந்த படத்தில் வில்லனா, சிறப்பு தோற்றமா? என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை

நான்கு வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்து வருவதாக கூறப்படும் இந்த படத்தின் நாயகியாக சாயிஷா நடித்து வருகிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார்.