லைகா சுபாஷ்கரன் - விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சந்திப்பு: முக்கிய அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் சுபாஸ்கரன் அவர்களை தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சந்தித்து புதிய படத்திற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து லைக்கா நிறுவனத்தின் சுபாஸ்கரன் கூறியபோது ’தனித்துவமான கதை மற்றும் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கக்கூடிய அனுபவத்துடன் ஜேசன் சஞ்சய் கதை உள்ளது.
லண்டனில் திரைக்கதை வசனம் எழுதுவதில் பிஏ ஹானர்ஸ் முடித்துள்ள ஜேசன் தொடர்ந்து கனடாவில் திரைப்பட தயாரிப்பில் டிப்ளமோ பெற்றுள்ளார். அவர் திரைக்கதையை விவரித்தபோது எங்களுக்கு இது சரியான அனுபவத்தை கொடுத்ததில் திருப்தி அடைந்தோம். அவர் திரைக்கதை எழுதுவதில் இயக்குவதில் மட்டும் இல்லாமல் தயாரிப்பையும் புரிந்து கொண்டிருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஜேசன் சஞ்சய் உடன் இணைந்து பணியாற்றுவது அற்புதமான அனுபவத்தை தரும் என்று காத்திருக்கிறோம் என்று கூறினார்.
ஜேசன் சஞ்சய் குறித்து கூறிய போது ’லைக்கா நிறுவனம் போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது முதல் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். என்னை போன்ற இளம் திறமையானவர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. எனது ஸ்கிரிப்டை விரும்பி அதை உருவாக்க எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். இந்த வாய்ப்பு கொடுத்த சுபாஸ்கரன் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதையும் நான் உணர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
We are beyond excited 🤩 & proud 😌 to introduce #JasonSanjay in his Directorial Debut 🎬 We wish him a career filled with success & contentment 🤗 carrying forward the legacy! 🌟#LycaProductionsNext #JasonSanjayDirectorialDebut @SureshChandraa @DoneChannel1 @gkmtamilkumaran… pic.twitter.com/KhBL0h7WTM
— IndiaGlitz - Tamil (@igtamil) August 28, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments