close
Choose your channels

'2.0' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி. ராஜூ மகாலிங்கம் அறிவிப்பு

Wednesday, August 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் டீசர் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் சற்று முன்னர் லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இன்று இயக்குனர் ஷங்கருக்கு தனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட ராஜூ மகாலிங்கம், '2.0 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த படம் தொடங்கி கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகிய நிலையில் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு, அந்தோணி படத்தொகுப்பும் செய்கின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment