மோகன்லாலின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Saturday,December 08 2018]

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வந்த மலையாள திரைப்படமான 'ஒடியன்' என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவு பெற்றது. இந்த படம் கேரளா, தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 167 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 47 நிமிடங்களாக உள்ளது.

மோகன்லால், பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ளார். ஜெயச்சந்திரன், சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஷாஜிகுமார் ஒளிப்பதிவும், ஜான்குட்டி படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.