தந்தை இறந்த ஒரே மாதத்தில் கொரோனாவுக்கு பலியான பிரபல பாடகி: முதல்வர் இரங்கல்!

  • IndiaGlitz, [Monday,June 21 2021]

பிரபல பாடகி ஒருவரின் தந்தை கடந்த மாதம் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் சற்று முன்னர் பாடகியும் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஒடியா மொழி பாடகி தபு மிஸ்ரா. இவர் ஒடியா மொழியில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த மாதம் தபு மிஸ்ரா மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் பத்தாம் தேதி தபு மிஸ்ரா தந்தை பலியானார்.

இதனை அடுத்து தபு மிஸ்ரா உடல்நிலையும் கவலைக்கிடமாக இருந்ததையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த பாடகி தபு மிஸ்ரா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குலாநந்தன் என்ற படத்தில் பாடகியாக அறிமுகமாகி 150க்கும் மேற்பட்ட படங்களில் அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. பாடகி தபு மிஸ்ராவின் மறைவு இந்திய திரையுலகிற்கு பேரிழப்பு என திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தபு மிஸ்ரா மறைவுக்கு ஒடிசா மாநிலம் முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.