ஏப்ரல் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: மாநில அரசு அறிவிப்பு
- IndiaGlitz, [Thursday,April 09 2020]
இந்தியாவில் கொரோனா வைரஸ் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 14ஆம் தேதி நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவின் 12 மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. அது மட்டுமன்றி வரும் 11ம் தேதி பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.