கல்லீரல் தானம் கிடைத்தும் பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கல்லீரல் பாதிப்பு காரணமாக பிரபல ஒடிசா நடிகர் பிந்து நந்தா உயிரிழந்தார். அவருக்கு உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதால் அவருடைய ரசிகர்கள் கடும் வருத்தத்தை வெளியிட்டு வருகின்றனர்.
45 வயதான நடிகர் பிந்து நந்தாவிற்கு நாள்பட்ட கல்லீரல் பாதிப்பு இருந்த நிலையில் புது டெல்லியிலுள்ள கல்லீரல் மற்றும் பிலியரி சயின்ஸ் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் மருத்துவர்கள் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் உடனடியாக மாற்று உறுப்பு கிடைக்காமல் கடந்த வாரம் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் நடிகர் பிந்து நந்தா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து உறவினர் ஒருவர் நடிகர் பிந்து நந்தாவிற்கு கல்லீரல் தானம் அளித்த நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இரத்தம் ஒவ்வாமை, மேலும் சில காரணங்களாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு நடிகர் பிந்து நந்தா உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் கடும் சோகத்தை வெளியிட்டு வருகின்றனர்.
முதலில் தொலைக்காட்சிகளில் தனது வாழ்க்கையை ஆரம்பித்த நடிகர் பிந்து நந்தா கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் முறையாக வெள்ளித்திரையில் தோன்றியுள்ளார். தொடர்ந்து 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நடிகராக வலம்வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com