ஒருநாள் போட்டியிலும் ரோஹித் இல்லையா? திடீர் ஆலோசனையில் பிசிசிஐ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவிற்கு பதிலான கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ அவரச ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
டி20 கேப்டன்சியை தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கும் ரோஹித் சர்மாவை கேப்டனாக பிசிசிஐ நியமித்தது. இதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்க போட்டியில் ரோஹித் சர்மா ஜொலிப்பார் எனக் கருதப்பட்ட நிலையில் தற்போது தசைப்பிடிப்பு ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி சிகிச்சை எடுத்துவருகிறார்.
தற்போது தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டிகள் 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி முடிந்தவுடன் ஜனவரி 19 ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ரோஹித் சர்மாவின் காயம் இன்னும் சரியாகவில்லை. இதனால் ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் 11 அணியை இன்னும் பிசிசிஐ அறிவிக்காமல் இருக்கிறது. இதைத்தொடர்ந்து வரும் 30, 31 ஆம் தேதி வரை காத்திருத்துப் பின்னர் ஒருநாள் போட்டியின் பிளேயிங் அணியை பிசிசிஐ அறிவிக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதற்குள் ரோஹித் உடல்தகுதியை நிரூபித்துவிட்டால் அவர் ஒருநாள் போட்டியின் பிளேயிங் அணியில் இடம்பெறுவார் என்றும் ஆனால் உடல்தகுதி அடிப்படையில் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார் என்றும் கேப்டனாக கே.எல்.ராகுல் மற்றும் துணை கேப்டனாக விராட் கோலியே செயல்படுவார்கள் என்றும் தகவல்கள் கூறப்படுகின்றன.
மேலும் மூத்த வீரர்களான அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா இருவரும் தற்போது காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளனர். இவர்களுக்குப் பதிலான இளம் வீரர்கள் ருதுத்ரவாஜ் கெயிக்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அணியில் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் 4 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் முதல்முறையாக அஸ்வின் களமிறங்க ஹவள்ளனர்.
இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் இந்திய அணி, முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் ஓப்பனர்களாக களம் இறங்கினர். முதல் விக்கெட் வரை 170 ரன்கள் எடுத்த இந்திய அணியில் மயங்க் அகர்வால் அவுட்டாக தொடர்ந்து புஜாராவும் டக் அவுட்டானார்.
இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேல் ராகுல் சதம் விளாசினார். இவருக்கு ராஹானே கம்பெனி கொடுத்தால் கே.எல்.ராகுல் 120 ரன்களுடனும் ராஹானே 40 ரன்களுடன் தற்போது களத்தில் உள்ளனர். இதையடுத்து இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்துள்ள நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் மழையின் காரணமாக ரத்துச்செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments