கொரோனாவில் இருந்து மீண்ட பின்பும், விடாமல் துரத்தும் மறதி நோய்… மருத்துவர்கள் அச்சம்!
- IndiaGlitz, [Tuesday,July 06 2021]
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அரிதாக மூளை பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் கூறி இருந்தனர். இந்நிலையில் தற்போது அதிகமாகப் பரவிவரும் டெல்டா வைரஸ் ஏற்படுத்தும் மூளை பாதிப்பு காரணமாக பெரும் அளவில் நரம்பியல் அறிகுறிகள் தோன்றுவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் மூளை பாதிப்பின் காரணமாகச் சிலருக்கு மறதி நோய் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதாவது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து மீண்ட பிறகு சிலருக்கு மறதி நோய் ஏற்படுகிறது. இதனால் என்ன சாப்பிட்டோம் என்பதைக் கூட சிலர் மறந்து விடுவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் பொதுவா சுவாசப் பாதையைப் பாதிக்கிறது என மருத்துவ உலகம் சுட்டிக்காட்டி இருந்தது. இந்த சுவாசப்பாதை வழியாக இனப்பெருக்கம் செய்யும் கொரோனா வைரஸ் மேல் நோக்கி மூளை வரைக்கும் சென்று விடுகிறது. இதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு பலருக்கு மறதி நோய் ஏற்படுகிறது. இப்படி வரும் மறதி நோய் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் அல்லது அறிகுறியே இல்லாதவர்களுக்குக் கூட வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
அதுவும் நீண்ட நாட்களாக ஐசியுவில் இருப்பவர்கள், தீவிர கொரேனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இதுபோன்ற குழப்ப நிலை எளிதாக ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுபோன்ற மறதி நோய் நாட்கள் செல்ல செல்ல குறைந்துவிடும் எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.