லண்டன் தொழிலதிபரை மணந்த 'ஓ சொல்றியா மாமா' பாடலை பாடிய பாடகி!

  • IndiaGlitz, [Saturday,May 21 2022]

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் இடம் பெற்ற ’ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலின் ஹிந்தி பாடலை பாடிய பாடகிக்கு திருமணம் நடந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலை தமிழில் நடிகை ஆண்ட்ரியா பாடிய நிலையில் இந்தியில் பிரபல பாடகி கனிகா கபூர் பாடினார். இந்த பாடல் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 43 வயதாகும் பாடகி கனிகா கபூர், லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் கெளதம் ஹதிராமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று லண்டன் ஓட்டலில் நடந்த இந்த திருமணத்தில் இரு தரப்பு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்தத் திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு: தனுஷ் அனுப்பிய நோட்டீஸால் பரபரப்பு!

நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

மணமக்கள் கோலத்தில் பிக்பாஸ் வருண்-அக்சரா: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வருண் மற்றும் அக்சரா ஆகிய இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து

'நெஞ்சுக்கு நீதி' படத்திற்கு எதிராக இந்துக்கள் ஒன்று சேருங்கள்: தமிழ் நடிகையின் பதிவு

'நெஞ்சுக்கு நீதி' படத்தில் தேவையற்ற திராவிட மாடல் வசனங்கள் இருப்பதாகவும், இந்த படம் பிராமண அவதூறு என்றும், இந்த படத்துக்கு எதிராக இந்துக்கள் தங்கள் ஒற்றுமையை காட்ட வேண்டும்

'பரத் 50வது படம் குறித்து முக்கிய அப்டேட் தந்த வாணிபோஜன்!

பரத் நடிக்கும் 50-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை இந்த படத்தின் நாயகி வாணி போஜன் தெரிவித்துள்ளார் 

தீபிகா, தமன்னா, பூஜா ஹெக்டே, ஊர்வசி ரெளட்டாலா: கேன்ஸ் விழாவில் செம ஆட்டம்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரை உலகின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, தமன்னா, ஊர்வசி ரெளட்டாலா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் நடனம் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.