அதிமுக வங்கிக்கணக்கை முடக்க வேண்டும். வங்கி அதிகாரிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

தமிழக முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று வரை அதிமுகவின் பொருளாளராகவும் இருந்தார். ஆனால் நேற்றிரவு சென்னை மெரீனாவில் ஆழ்ந்த தியானத்திற்கு அவர் அளித்த பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் அவர்களை நீக்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் பொதுச்செயலாளர் முறையாக தேர்வு செய்யப்படாததால், அவரது உத்தரவுகள் செல்லாது என்றும் அந்த கட்சியின் பொருளாளரான தனது உத்தரவின்றி வங்கிக் கணக்கில் எந்த பணப் பரிமாற்றமும் மேற்கொள்ளக்கூடாது என்றும் மயிலாப்பூரில் உள்ள 2 வங்கிகளுக்கு முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதிமுகவின் வங்கிக்கணக்கை முடக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஓபிஎஸ் அவர்களின் அடுத்தடுத்த அதிரடி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.