சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு! 15 பேர் கட்சியில் இருந்து நீக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் 21 ஆம் தேதி முதல் தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவை எதிர்கட்சியின் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
முன்னதாகத் தமிழக எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் துணைத் தலைவருக்கான பதவி முடிவு செய்யப்படாத நிலையில் இன்று அத்தேர்வு நடைபெற்றது. மேலும் கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் பொருளாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அதோடு இந்தக் கூட்டத்தில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அமைச்சர்கள், உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதனால் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாகக் கூட்டறிக்கை ஒன்று வெளியாகியது. அதில்,
கள்ளக்குறிச்சி முன்னாள் அமைச்சர் ஆனந்தன்
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.பி. வி.கே. சின்னசாமி
தேனியைச் சேர்ந்த ஏ.கே.எம். அழகர் சாமி
வேலூரைச் சேர்ந்த எஸ்.கே.எம்.பி வாசு
ராமநாதபுரத்தை சேர்ந்த சோமாத்தூர், ஆ.சுப்பிரமணியம், வின்சென்ட் ராஜா
பருத்தியூர் நடராஜன் உள்ளிட்ட 15 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/DdJ3WxXIeu
— AIADMK (@AIADMKOfficial) June 14, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout