தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்

  • IndiaGlitz, [Tuesday,December 06 2016]

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடரந்து அவரது வெற்றிடத்தை நிரப்பும் வகையிலும், அவரது பணியை தொடரும் வகையிலும் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சற்று முன்னர் தமிழக ஆளுனர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சோகமே உருவான முகத்துடன் கண்ணீருடன் முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்று கொண்டார். அவரை தொடரந்து 15 அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர்.